தமிழகம் முழுக்க அதிர்வலைகளை கிளப்பிய கான்ஸ்டபிள் ராஜினாமா - தென்காசி காவல்துறைக்கு ஓபனாக சவால்

Update: 2024-12-29 07:25 GMT

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் பிரபாகரன் என்பவர் தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியும் காவல்துறை தலைமை இயக்குனருக்கு ராஜினாமா கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் காவலர் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும், காவலர் கொடுத்த மனுவில் காவல் உயர் அதிகாரிகள் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை சித்தரித்து எழுதியுள்ளார் என்றும் தென்காசி காவல்துறை தெரிவித்துள்ளது. காவலர்கள் வெளிநாடு செல்வது குறித்து தவறான தகவல்களை வாட்ஸ்அப் சமூக வலைதளத்தில் பரப்பியதாகவும், சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. இதனிடையே, சம்பந்தப்பட்ட காவலர் தனது முகநூல் பக்கத்தில் ராஜினாமா கடிதத்தில் ஆறாவது பக்கத்தை பார்த்தால் தனது பெயர் என்ன என்று தெரியும் எனவும் முடிந்தவரை அவதூறு பரப்பிக் கொள்ளுங்கள் உயர்நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்