பதறவைக்கும் பாம்பன் பாலம்.. கால் வைத்து செல்லவே குலைநடுங்கும் மக்கள்

Update: 2024-11-29 09:54 GMT

பாம்பன் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்து அச்சமின்றி பயணிக்கும் வகையில் திறக்கப்பட வேண்டும் என மீனவ சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்... ராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலம் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிலையில், இதை ஆய்வு செய்த அதிகாரி சவுத்ரி, பாலத்தின் உறுதித் தன்மை குறித்து குறைபாடுகள் உள்ளதாகக் கூறி சமூக வலைதளத்தில் பதிவிட்டிடுந்தார். அதற்கு விளக்கம் அளித்த தென்னக ரயில்வே, உறுதித் தன்மையை ஆய்வு செய்ய 5 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், அவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் புதிய ரயில்வே பாலத்தை ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் பாலத்தை நன்கு ஆய்வு செய்து மக்கள் அச்சம் இன்றி பயணிக்க வழிவகை செய்ய வேண்டும் என மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்