திடீரென முருகன் கோயிலில் தோன்றிய அருவி - பழனியில் விடாமல் அடித்த மே மழை..
பழனியில் கனமழை காரணமாக கோவில்கள், வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் பழனி முருகன் கோவிலின் படிக்கட்டுகளில், மழைநீர் அருவிபோல கொட்டியது. பழனி பேருந்து நிலையம், ரயில் நிலையம், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் புகுந்ததால், நோயாளிகள் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சாலைகளில் மழைநீர் குளம்போல் காட்சியளிப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் மழைநீரோடு சேர்ந்து பாம்பு, பூரான், விஷப்பூச்சிகள் சேர்ந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.