கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் 8வது நாளாக என்எல்சி நிர்வாகம் சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தி கால்வாய் வெட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்எல்சி நிறுவனம்.
பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில் பணிகளை கைவிடாமல் தொடர்ந்து கால்வாய் வெட்டும் பணியில் மும்முரம் காட்டியது என்எல்சி. இந்த நிலையில் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த பொழுது என்எல்சி நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு 40,000, வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது உத்தரவுக்கு பொதுமக்கள் , விவசாயிகள் மற்றும் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை எதிர்ப்போ அல்லது வரவேற்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஏன் மௌனம் காக்கிறார்கள் என்று புதிராக உள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று 8வது நாளாக கால்வாய் வெட்டும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்எல்சி நிறுவனம்.