ரூ.3.58 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை - `தங்களுடையது' என நிற்கும் ஒப்பந்ததாரர்கள்

Update: 2024-09-16 02:07 GMT

ரூ.3.58 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை - `தங்களுடையது' என நிற்கும் ஒப்பந்ததாரர்கள்

சேரங்கோடு ஊராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்யப்பட்ட 3 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் தங்களுடையது, திருப்பித் தர வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேரங்கோடு ஊராட்சியில் கடந்த 12ம் தேதி கணக்கில் வராத ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. ஊராட்சியில் பல்வேறு பணிகளுக்காக டெண்டர் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மாலையில் பணம் சிக்கியது. இதுதொடர்பாக ஊராட்சி செயலாளர் சஜித், பணியாளர் ஷைபு மற்றும் 5 ஆவது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், குடிநீர் உதவியாளர் சுபாஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. இந்த சூழலில் லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்த பணம் தங்களுடையது என ஒப்பந்தத்தாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க் பிரச்சினையால் வைப்புத் தொகை விபரத்தை கணினியில் பதிவு செய்ய முடியவில்லை என்றும் அப்போது வெளியே இருந்ததால் தங்கள் பணம் என சொல்ல முடியாமல் போனதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்