நீலகிரி மாவட்டம் கூடலூரைஅடுத்த பாடந்துறை பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமத்தில் காட்டு யானை ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த நியைில், யானை ஊருக்குள் வருவதை தடுக்க வளர்ப்பு நாய்கள் உதவியோடு சத்தம் எழுப்பி யானையை துரத்தும் பணியில் ஈடுபட்டனர். யாட்டு யானையால் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னர், அதனை அடர்ந்து வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.