"நீட் தேர்வு- தீர்வு கண்ட பிறகே கவுன்சிலிங்" - நீட் பயிற்சியாளர் ரெக்வஸ்ட்

Update: 2024-06-11 13:59 GMT

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. அதில், 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இந்த தேர்வில் சிலருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 600-க்கும் அதிகமான மதிப்பெண்களை பலர் பெற்றுள்ளதால், தமிழ்நாட்டில் கட்ஆப் மதிப்பெண் உயர்ந்து, மிக கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்த தீர்வு கண்ட பிறகு கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்று நீட் பயிற்சியாளர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்