கணவனுக்கு தீரா நோய் என வெறுத்தமனைவிக்கு மறக்க முடியாத பரிசை கொடுத்து ஓடிய உறவுக்கார இளைஞர்
கணவரை பிரிந்த பெண்ணையும், கல்லூரி மாணவியையும் ஒரே நேரத்தில் காதலித்து வந்த தீராத விளையாட்டுப் பிள்ளையான இளைஞர் ஒருவர்.... கடைசியில் ஒருவரை மணமுடித்து காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தது கிருஷ்ணகிரியை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது. பார்க்கலாம் விரிவாக....
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி...
கடந்த 2016ல் அகரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை மணமுடித்து குழந்தை பெற்றெடுத்த இவர், கணவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததை பார்த்து மனம் வெறுத்து விவகாரத்து பெற்றிருக்கிறார்...
இந்நிலையில், தன் குழந்தையுடன் தனியே வசித்து வந்த வைத்தீஸ்வரிக்கு அவரின் நெருங்கிய உறவினரான சீனிவாசன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது....
இதில், வைத்தீஸ்வரியை காதலிப்பதாகவும், அவரை திருமண செய்து கொள்வதாகவும் கூறி உருகி உருகி பேசி... சீனிவாசன் நெருங்கி பழகி வந்த நிலையில், இதன் காரணமாக வைத்தீஸ்வரிக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது....
கோவையில் வைத்தீஸ்வரி வேலை பார்த்து வந்ததால், அவருடனே கோவையில் குடித்தனம் நடத்திய சீனிவாசன், வைத்தீஸ்வரியின் மாதச் சம்பளம் மற்றும் அவரின் நகைகளை பெற்று செலவழித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது....
இதனிடையே, தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி சீனிவாசனுக்கு வைத்தீஸ்வரி நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறார்...
இந்நிலையில், வைத்தீஸ்வரியுடனான காதல் கசந்த சீனிவாசனனுக்கு தன் தாய்மாமன் மகளான கல்லூரி மாணவி ஸ்வேதா மீது காதல் மலர்ந்திருக்கிறது...
இதில், தன் வீட்டார் மூலம் முறைப்படி சீனிவாசன் பெண் கேட்டுச் சென்றதாகவும் கூறப்படும் நிலையில், சீனிவாசனின் லீலைகளையும், அவர் ஒரு பெண்னுடன் தகாத முறையில் குடும்பம் நடத்தி வருவதையும் அறிந்த பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுத்திருக்கின்றனர்...
இதனால், அப்செட்டில் இருந்த சீனிவாசன், தீராத விளையாட்டு பிள்ளை பட பாணியில் நேரடியாக களத்தில் இறங்கி தன் மாமன் பெண்ணுக்கு ரூட் விட்டிருக்கிறார்..
தினமும் கல்லூரி சென்ற அவரை பின் தொடர்ந்து சீனிவாசன் காதல் வலை வீசிய நிலையில், வலையில் பெண்ணும் விழுந்திருக்கிறது...
இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்தும் வந்துள்ளனர்...
இதில், ஒரே நேரத்தில் வைத்தீஸ்வரியையும், மாமன் பெண்ணையும் மேனஜ் செய்து வந்திருக்கிறார் சீனிவாசன்...
இந்நிலையில், படிப்பை முடித்த ஸ்வேதா கல்லூரி சென்று டீசி வாங்கி வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், சீனிவாசனை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு தலைமறைவானது குடும்பத்தினரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது...
இந்த தகவல் வைத்தீஸ்வரியின் தலையில் பேரிடியாய் விழுந்திருக்கிறது...
உடனே ஸ்வேதாவின் வீட்டார் மாத்தூர் காவல்நிலையத்தில் தங்கள் பெண்ணை மீட்டுத் தரும்படி புகாரளித்த நிலையில், தலைமறைவாக இருந்த தம்பதி இருவரும், அதே காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
இதையறிந்து காவல்நிலையம் வந்த வைத்தீஸ்வரி சீனிவாசன் மீது புகாரளித்தது பரபரப்பை மேலும் கூட்டியது..