அநியாயமாக பறிபோன 2 உயிர்கள்.. இரவோடு இரவாக கோவையில் திடீர் மாற்றம்

Update: 2024-11-23 09:01 GMT

கோவை ராமநாதபுரம் பகுதியில், விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்ததையடுத்து, இரவோடு இரவாக சாலைகள் சீரமைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மருதூரை சேர்ந்த செல்வராஜ் மற்றும் பெரியார் நகரை சேர்ந்த விக்டர் ஆகியோர், இருசக்கர வாகனத்தில் சென்ற போது இராமநாதபுரம் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். பாதாள சாக்கடை பணியால், சாலைகள் முறையாக இல்லாததால் விபத்து நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, இரவோடு இரவாக சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், முன்னரே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்