#BREAKING || கள்ளக்குறிச்சி மரணம்.. அடக்கம் செய்த உடலை தோண்டி எடுக்க அரசு உத்தரவு

Update: 2024-06-23 12:44 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தில் கடந்த 18ம் தேதி உயிரிழந்தவரின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை. ஜெயமுருகன் மற்றும் இளையராஜா ஆகிய இருவர் சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு பயந்து உடலை புதைத்த உறவினர்கள். இளையராஜாவின் சடலம் தகனம் செய்யப்பட்ட நிலையில், ஜெயமுருகனின் உடலை புதைத்த உறவினர்கள். திடீரென விஷ சாராயம் குடித்து உயிரிழந்ததாக நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு அளித்த உறவினர்கள். புதைக்கப்பட்ட ஜெயமுருகன் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய அரசு உத்தரவு. உடல் தோண்டி எடுப்பு - சின்னசேலம் வட்டாட்சியர் முன்னிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் குழு அதே இடத்தில் பிரேத பரிசோதனை.

Tags:    

மேலும் செய்திகள்