ஃபுல் போதையில் காரை ஓட்டிய நபர்..! 2 பெண்களை அடித்து தூக்கிய ஓட்டுநர்.. அதிரடி காட்டிய போலீஸ்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரை சேர்ந்த வேம்பு, சுமித்ரா மற்றும் வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜகுமாரி ஆகியோர், டோல்கேட் அருகே உள்ள சலவை நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், இரவுப் பணி முடிந்து வீட்டிற்கு சென்றனர். அப்போது, கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் மார்க்கமாக சென்ற கார் மோதியதில் வேம்பு ,சுமித்ரா ஆகியோர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வந்தனர். இந்நிலையில், மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முகமது பைசல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.