#Justin|| புகை வைத்த தமிழக போலீஸ்.. அகப்பட போகும் ஆருத்ரா மோசடி மன்னன்

Update: 2023-08-17 06:33 GMT

ஆருத்ரா மோசடி - குற்றவாளியை பிடிக்க புதிய முயற்சி

ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் பதுங்கி இருக்கும் நிறுவன இயக்குனரை பிடிக்க, துபாய் நாட்டுடன் பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளும் தமிழக காவல்துறை

சில முக்கிய வழக்குகளில் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை கைது செய்ய பயன்படுத்தும், சிறப்பு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்த திட்டம்

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மூலம், முதலீட்டாளர்களிடம் ரூ.2,500 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர் அவரது மனைவி உஷா, மைக்கேல் ராஜ் ஆகியோர் தலைமறைவாகி துபாயில் வசித்து வருகின்றனர்

துபாயில் சுமார் ரூ.300 கோடி வரை ஆருத்ரா ராஜசேகர் முதலீடு செய்திருப்பதாக அதிகாரிகள் தகவல்

ஆருத்ரா நிர்வாகிகள் சிலருடன் தொடர்பு உடையவராக குற்றம்சாட்டப்படும் நடிகர் ஆர்.கே சுரேஷ், துபாயில் பதுங்கி இருப்பதாக போலீசார் தகவல்

ஆருத்ரா கோல்டு நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் வசூலித்த மோசடி பணத்தை, இயக்குநர் ராஜசேகர் துபாயில் முதலீடு செய்திருப்பதாக தகவல்

மோசடி வழக்கில் துபாயில் குடும்பத்துடன் பதுங்கி வசித்து வரும் ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை பிடிக்க, துபாய் நாட்டுடன் தமிழக காவல் துறை பரஸ்பர சட்ட ஒப்பந்ததை பயன்படுத்தி உள்ளது.

சென்னை சூளைமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து, சுமார் ரூபாய் 2 ஆயிரத்து 500 கோடி வசூலித்து மோசடி செய்ததாக, பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டினர்...

இந்நிலையில், ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர் அவரது மனைவி உஷா, மைக்கேல் ராஜ் ஆகியோர் தலைமறைவாகி துபாயில் வசித்து வருகின்றனர்...

ஆருத்ரா நிர்வாகிகள் சிலருடன் தொடர்பு உடையவராக குற்றம்சாட்டப்படும் நடிகர் ஆர்.கே சுரேஷ், துபாயில் பதுங்கி இருந்து வருவதாக போலீசார் கூறிவருகின்றனர்...

இந்த மாதிரியான சூழலில் சில முக்கிய வழக்குகளில் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய பயன்படுத்தும், இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்தி ஆருத்ரா வழக்கின் முக்கிய குற்றவாளியும், ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநருமான ராஜசேகரை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு போலீஸ் திட்டமிட்டுள்ளனர்.

துபாய் நாட்டுடன் இந்தியா, மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கையகப்படுத்தி கொள்ளவும், வழக்கின் தகவல்களைச் சேகரிக்கவும் மற்றும் சந்தேக நபர் வெளிநாட்டில் வசிக்கும் போது, ​​அவரை முறையாக விசாரிக்கவும் எம்-லாட் எனும் இந்த பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை செய்து, ராஜசேகர் வசித்து வரும் இருப்பிடம், பயன்படுத்தி வரும் காரின் பதிவெண், முதலீடு செய்தற்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, துபாய் நாட்டுக்கு தெரியபடுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது...

ஆருத்ரா கோல்டு நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் வசூலித்த மோசடி பணத்தை, இயக்குநர் ராஜசேகர் துபாயில் முதலீடு செய்திருப்பதாக கண்டுபிடித்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இருநாட்டு பரஸ்பர ஒப்பந்தம் மூலம் சொத்துக்களை முடக்க முடியும் எனவும், வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் துபாயில் சொந்தமாக ஒரு இடத்தை அசையா சொத்தாக வாங்குவதில் சட்ட சிக்கல் இருக்கும் நிலையில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருக்கலாம் என கூறும் நிலையில், துபாயில் சுமார் ரூபாய்

300 கோடி ரூபாய் வரை ஆருத்ரா ராஜசேகர் முதலீடு செய்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரு நாட்டுடன் எம்-லாட் எனும் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படத்தி, ஆருத்ரா வழக்கு நடைபெறும் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று அவற்றை இருநாட்டு அதிகாரிகள் மூலமாக துபாய் நாட்டின் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து துபாயில் முதலீடு செய்யப்பட்டுள்ள மோசடி பணத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அதோடு மட்டுமல்லாமல் மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜசேகர் உள்ளிட்டவர்களை பிடிக்க, ஏற்கனவே இன்டர்போல் மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த பரஸ்பர ஒப்பந்தத்தின்படி ராஜசேகர் உள்ளிட்டவர்களை அந்நாட்டு காவல்துறை, தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும் எனவும் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்