இல்லத்தரசிகளே.. குட் நியூஸ்... நேற்று ரூ.30.. இன்று ரூ.20 - ஏறிய அதே வேகத்தில் இறங்கிய தக்காளி விலை

Update: 2023-08-05 15:27 GMT

தொடர்ந்து ஷாக் கொடுத்து வந்த தக்காளியின் விலை தற்போது படிப்படியாக குறைந்துள்ளதால், மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

கடந்த ஒருமாத காலமாக ஒட்டுமொத்த இந்தியாவின் பேசுபொருளாக இருந்து வருகிறது தக்காளி....கடந்த சில வாரங்களாக விண்ணை முட்டும் விலையேற்றத்தால்

மக்கள் கலங்கியிருக்க...மேலும் விலை உயரும் என எச்சரிக்கை மணியும் ஒலித்தது.

விலை உயரக்கூடும் என்ற தகவலால் மக்கள் துவண்டு கிடந்த நிலையில், கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மொத்த விலையில் கிலோவுக்கு 170க்கும் சில்லறை விலையில் ரூ. 200க்கும் விற்பனை யானது... தொடர்ந்து 2ம் தேதி மொத்த விலையில்

10 ரூபாய் குறைந்து 160 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் பின் 3ம் தேதி மேலும் 10 ரூபாய் குரைந்து 150 ரூபாய்க்கு விற்பனையானது.

படிப்படியாக குறைந்து வந்த விலை 4ம் தேதி 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 5ம் தேதி 20 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த வாரங்களில் இரட்டை சதமடித்து மிரட்டி வந்த விலை, தற்போது பெருமளவு குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சுடன் தக்காளி வாங்கி சென்றனர்.

தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை அதிரடியாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சாகுபடி பரப்பு அதிகரித்து, அறுவடையும் தீவிரமடைந்துள்ளதால், வரும் நாட்களில் அதன் வரத்து அதிகரித்து, விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையில் பெரியளவு மாற்றமில்லை என்றாலும் விலை சற்று குறைந்துள்ளது.

இனி வரும் நாட்களில் காய்கறி விலை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என இல்லத்தரசிகள் காத்து கிடக்கின் றனர்.

இருப்பினும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் தான் வரத்து சீராகி இயல்பு விலைக்கு தக்காளி மற்றும் காய்கறிகள் விற்பனையாகும் எனவும் கூறப்படுகிறது.

சற்றே தனிந்த தக்காளி விலை

மொத்த விலை சில்லறை விலை

ஆகஸ்ட் 1 = ரூ.170/- ரூ.200/-

ஆகஸ்ட் 2 = ரூ.160/- ரூ.180

ஆகஸ்ட் 3 = ரூ. 150/- ரூ.170

ஆகஸ்ட் 4 = ரூ. 120/- ரூ. 130

ஆகஸ்ட் 5 = ரூ. 100/- ரூ. 110

Tags:    

மேலும் செய்திகள்