ஓரினச்சேர்க்கை உல்லாசம் குலநாசம்..சென்னை மாணவனுக்கு நேர்ந்த கதி-அம்மணமாக்கி Gay பாய்ஸ் செய்த காரியம்

Update: 2023-08-03 08:13 GMT

டேட்டிங் ஆப் மூலம் இளைஞர்களை குறிவைத்து, நகை மற்றும் பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

இணையம் வழியாக அரங்கேறும் மோசடிகள், நாளுக்குநாள் ஒருவித அச்சத்தையே ஏற்படுத்தி வருகின்றன...

செல்போனில் தெரிந்தவர்கள் கால் செய்வதை விட, தெரியாத நபர்கள் செய்யும் கால்களே தற்போது அதிகரித்துள்ளது. Unknown நம்பரில் வரும் கால்களை எடுத்து பேசும் போது, சைபர் கிரைம் குற்றவாளிகளாக இருப்பார்களோ என்ற பயம் மனதில் ஒரு பயத்தை உருவாக்குகிறது.

அந்த வழியில் தற்போது இணையம் வழியாக அரங்கேறியுள்ள சம்பவம், நமக்கு வினோதமானது என்று கூட சொல்லலாம்...

சென்னையை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் ஓரினசேர்க்கையாளர் டேட்டிங் செய்யும் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார்.

அந்த செயலியில் அறிமுகமான நபர் ஒருவர், கல்லூரி மாணவனிடம் நெருக்கமாகவும், ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார்.

பின்னர் இருவரும் ரகசிய இடத்தில் சந்திக்கலாமா என கேட்க, அதற்கு சம்மதித்த கல்லூரி மாணவர், அந்த நிழல் மனிதன் கூறிய இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு கல்லூரி மாணவர் வீட்டின் அறைக்குள் சென்றதும், அங்கு மறைத்திருந்த 3 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டவே, அச்சமடைந்த கல்லூரி மாணவர், தவறான இடத்தில் வந்து சிக்கி விட்டோமோ என அச்சமடைந்துள்ளார்.

பின்னர் கல்லூரி மாணவரை அந்த கும்பல் நிர்வாணப்படுத்தி, அதனை வீடியோவாக செல்போனில் எடுத்து, பணம் மற்றும் நகையை கேட்டு மிரட்டியுள்ளது.

கையில் பணமில்லை எனக் கூற, அவரது ஏடி.எம் கார்டை பறித்த கும்பல், ஏடிஎம்மில் இருந்து 13 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு இளைஞரை அனுப்பி வைத்துள்ளது.

மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டவே, ஒரு வித குழப்பத்திலும், அச்சத்திலும் வீடு திரும்பிய மாணவன், விறுவிறுவென காவல்நிலையத்திற்கு சென்று, தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர் சிந்தியபடி கூறியுள்ளார்.

புகாரின் பேரில் கல்லூரி மாணவனிடம் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் மதுரையை சேர்ந்த தேவேந்திரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

வேறு வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேரும், 15 நாட்களுக்கு முன்பு சென்னையில் வீடு எடுத்து தங்கி, கோயம்பேட்டில் கூலி வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

கைதான இருவரிடம் நடத்திய விசாரணையில், மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக ஓரினசேர்க்கை செயலியில் போலியான பெயரில் ஐடியை உருவாக்கி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வயதான நபர்களிடம் ஆபாசமாகவும், நெருக்கமாகவும் பேசுவதை இந்த கும்பல் வாடிக்கையாக வைத்திருப்பதும், பின்னர் நெருக்கமாக இருக்க ரகசிய இடத்தில் சந்திக்கலாம் என அவர்களை வரவழைத்து, கத்தியை காட்டி மிரட்டி, நிர்வாணப்படுத்தி, பணம், நகை, செல்போன்கள் பறித்து வந்ததும் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதே பாணியில் இந்த கும்பல், பாண்டிச்சேரி, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணம் பறித்து வந்ததும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, சமூக வலைதளத்தில் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்குமாறும், போட்டோக்கள் போன்றவற்றை ஷேர் செய்ய வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்