"இலங்கையில் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்" - மத்திய அமைச்சர் கொடுத்த முக்கிய உறுதி

Update: 2023-10-14 11:15 GMT

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

'சாகர் பரிக்ரமா' என்ற திட்டத்தின் மூலம், கடல் வழியே பயணித்து, மீனவ மக்களின் குறைகளை, மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, கிராமங்களுக்கே நேரில் சென்று கேட்டறிந்து வருகிறார். 9-வது கட்ட கடல் பயணத்தை விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை கிராமத்தில் தொடங்கிய அவர், தனது பயணத்தை சென்னையில் நிறைவு செய்தார். ஆந்திரா செல்லும் முன் சென்னை துறைமுகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பர்ஷோத்தம் ரூபாலா, இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில், 26 பகுதிகள் பறவைக்காய்ச்சல் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, உலக விலங்குகள் நல அமைப்பு அங்கீகரித்துள்ளதாக குறிப்பிட்டார். பறவைகள் இறைச்சி, முட்டைகள் ஏற்றுமதி அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்