``புயல் சின்னத்தால் வாழ்வாதாரமே போச்சு.. நிவாரணம் ரூ.10 ஆயிரம் வேணும்’’ - பரபரப்பு கோரிக்கை

Update: 2024-11-29 09:49 GMT

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கடலூர் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கூறும் மீனவர்கள், மழைக்கால நிவாரண தொகையை ஆறாயிரத்தில் இருந்து பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்