தமிழக அரசுக்கு துரை வைகோ வைத்த முக்கிய கோரிக்கை | Durai Vaiko | Thanthitv
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேயிலை தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேயிலை தோட்ட நிறுவனத்திடம் இருந்து கூடுதல் இழப்பீட்டு தொகையை பெற்று தரவும், அவர்கள் வசிப்பதற்கு போதிய இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும் தமிழக அரசு உடனடியாக உதவிட வேண்டும் எனவும் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.