ஆக்ரோஷமாய் சீறி பாய்ந்து வரும் வெள்ளம் ..ஆபத்தை உணராத மக்கள் செய்த காரியம் - அதிர்ச்சி காட்சி
திண்டுக்கல் சிறுமலையில் பெய்த கனமழையால் மதுரை சாத்தியார் அணை நீர்வரத்து கால்வாயில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்... பாலமேடு தெத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கமுத்தூர் பகுதியில் கால்வாயில் காட்டாற்று வெள்ளம் வருவதால் மக்கள் கயிறைக் கட்டி கடந்து சென்று வருகின்றனர்... இதையடுத்து இப்பகுதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.