கடனை செலுத்தியும் பேங்க் செய்த மோசமான செயல்! குடும்பத்தினர் எடுத்த திடீர் முடிவால் கடலூரில் பரபரப்பு

Update: 2024-11-29 11:44 GMT

கடலூர் அருகே வங்கிக் கடனை முழுமையாக செலுத்திய நிலையில், வீட்டுமனை பத்திரம் வழங்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் அடுத்த வெள்ளக்கரை வி.காட்டுப்பாளையம் சேர்ந்த சுந்தரமூர்த்தி - எழிலரசி தம்பதியர், தங்கள் மகன் முருகன் பி.டி.எஸ். படிப்புக்காக, கடந்த 2015ம் ஆண்டு, கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள வங்கியில், வீட்டு மனை பத்திரத்தை அடமானம் வைத்து 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், கல்விக்கடனை முழுமையாக செலுத்திய நிலையில், 4 ஆண்டுகளாக வீட்டுப்பத்திரத்தை வழங்காமல் வங்கி அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சுந்தரமூர்த்தி, அவரது மனைவி எழிலரசி ஆகியோர், தங்களது வீட்டு மனைப் பத்திரத்தை வழங்கக்கோரி, வங்கி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பத்திரத்தை 15 தினங்களுக்குள் தருவதாக கூறியபின் அங்கிருந்து சென்றனர்.

இதனால் வழக்கமாக பத்து மணிக்கு திறக்கப்பட வேண்டிய வங்கி, 2 மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்