வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 7நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கிண்டி, வடபழனி,கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர், அண்ணாநகர், பள்ளிக்கரணை, புழுதிவாக்கம் மட்டுமின்றி புழல், மாதவரம், ஆவடி என புறநகர் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, கோயம்பேடு முதல் வடபழனி வரையிலான சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்று கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.