ரிசர்வேஷன் பெட்டியில் வடக்கு நபர்கள் அராஜகம்..டாய்லெட் கூட செல்லவிடாமல் அட்ராசிட்டி - கதறிய சென்னைவாசிகள்.. வைரல் வீடியோ

Update: 2024-11-29 08:19 GMT

ஆன்மீக சுற்றுலா பயணம் செல்ல ரயிலில் முன்பதிவு செய்த சென்னையைச் சேர்ந்த வயது முதிர்ந்தவர்களின் இருக்கைகளை வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...வடசென்னையைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்டோர் காசி, கயா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு பாட்னாவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சங்கமித்ரா விரைவு ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறியுள்ளனர்... 45 பேரும் மூத்த குடிமகன்கள் என்பதால் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர். தீன்தயாள் ரயில் நிலையத்தில் ஏறி சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய அவர்களுக்கு நடுவழியில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது... திடீரென ஒரு இடத்தில் மளமளவென முண்டியடித்து ஏறிய வடமாநிலத்தவர்கள் முன்பதிவு சீட்டுகளை ஆக்கிரமித்துள்ளனர்... வயதானவர்களை கீழே தள்ளியும், பைகளைக் கொண்டு இடித்தும், இரவு நேரங்களில் தூங்க விடாமல் சத்தம் எழுப்பி தொந்தரவு செய்தும், கழிவறை கூட செல்ல விடாமல் அராஜகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகளுக்குத் தொடர்பு கொண்டு தெரிவித்த போதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... இவ்வாறு ஆக்கிரமிப்பார்கள் என்றால் எதற்காக முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி, ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது ரயிலில் நிம்மதி இல்லாமல் வீடு வந்து சேர்ந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்