சென்னையின் முக்கிய இடத்தில் மூழ்கிய தரைப்பாலம்.. உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் மக்கள்
சென்னை மதுரவாயல் அருகே நொளம்பூர் தரைப்பாலத்தின் மீது வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை சிறிதும் பொருட்படுத்தாத வாகன ஓட்டிகள், அவ்வழியாக பயணிக்கின்றனர். பாலத்தில் உள்ள பள்ளம் தெரியாததால் ஒரு சிலர் கீழே விழுந்து விடுவதாக கூறும் அப்பகுதி மக்கள், பழையபாலம் அருகே அமைக்கப்படும் புதிய பாலப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.