சென்னையில் திடீரென நிலைதடுமாறி ஆங்காங்கே விழுந்த மக்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்
சென்னை வானகரத்தில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட எண்ணெய்க் கழிவு, சாலையில் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் உள்ள நிறுவனத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள குடோனுக்கு டிப்பர் லாரியில் எண்ணெய்க் கழிவு எடுத்துச் செல்லப்பட்டன.
வானகரம் அருகே சென்றபோது, திடீரென்று நிறுத்தியதால், வாகனத்தில் இருந்து டன் கணக்கில் எண்ணெய்க் கழிவு சாலையில் கொட்டியது. அந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், நிலைத் தடுமாறி ஆங்காங்கே விழுந்தனர். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், சாலையை தடுப்பு வைத்து மூடி, லாரியில் தண்ணீரை வரவழைத்து சாலையின் கொட்டப்பட்டிருந்த எண்ணெய் கழிவை அகற்றினர்.