ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து அட்மிட்... ரிப்போர்ட் பார்த்து ஆடிப்போன மருத்துவர்கள்..! வெளிவந்த உண்மை

Update: 2024-08-26 16:17 GMT

ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து அட்மிட்... ரிப்போர்ட் பார்த்து ஆடிப்போன மருத்துவர்கள்..! பகீர் கிளப்பிய பெண் சொன்ன ஷாக் செய்தி

இன்னும் சில வருடங்களில், தங்கள் கிராமம் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விடுமோ? என அஞ்சுவதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு கிராம மக்கள் அஞ்சி தவிப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின்னணி என்ன ?... பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நெடுமரம் கிராமத்தில் தான் இந்த அவலம்...

கிராமத்தில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்டோர், ஒரே மாதிரியாய் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்...

இதில், 10க்கும் மேற்பட்ட உயிர்பலிகளும் அரங்கேறி இருக்கிறது...

இதனால், செய்வதறியாது தவித்த நெடுமரம் கிராம மக்களை பார்த்து, மருத்துவர்களும் சற்று ஆடிப்போன நிலையில், நீங்கள் பருகும் குடிநீரை எடுத்து வாருங்கள் என அவர்கள் கேட்டுப் பெற்று நடத்திய ஆய்வில்தான் இந்த பேரதிர்ச்சி...

நெடுமரம் கிராம மக்கள் பருகும் குடிநீரை சென்னையில் உள்ள ஆய்வு மையம் ஒன்றுக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், நீரில் அதிகமான அளவு சுண்ணாம்பு சத்து இருந்ததால், அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது...

இந்த சுகாதாரமற்ற குடிநீரை, கடந்த ஐந்து வருடங்களாக குடித்ததில்தான் நெடுமரம் கிராம மக்களுக்கு இந்த அவலம்...

இதனிடையே இந்த பிரச்சினை கடந்த ஐந்து வருடங்களாக மட்டும் இல்லையெனவும், என் மாமனார் கடந்த 13 வருடங்களுக்கு முன்பே இவ்வாறு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாக பெண் ஒருவர் பேசியது பகீர் கிளப்பியது..

சில மாதங்களுக்கு முன் கூட... இருதய பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர், தன் இரு சிறுநீரகத்தையும் இழந்தாக கிராம மக்கள் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது...

நெடுமரம் கிராமத்தின் ஏரியில் அமைந்திருக்கும் குடிதண்ணீர் கிணறில் இருந்து மக்களுக்கு நீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது...

கிணற்றில் பாசியும், குப்பையுமாக பேரவல நிலையில் நீர் இருப்பது காண்போரை முகம் சுழிக்கச் செய்யும் நிலையில், இந்த நீரை குடித்துதான் மக்கள் பேராபத்தில் சிக்கி தவிக்கின்றனர்...

கிராமத்தை சுற்றி எந்தவொரு ரசாயனம் சார்ந்த தொழிற்சாலைகளும் இல்லாத நிலையில், கிணற்று நீரில் சுண்ணாம்பு அதிகளவில் இருந்ததும், இந்த பிரச்சினையில் மக்கள் ஐந்து வருடங்களாக சிக்கி தவித்து வந்ததும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

குழந்தைகள் முதல் பலரும் இந்த பாதிப்புக்குள்ளாவதாக கூறி கிராம மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களை மீட்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்