பைடனை நோக்கி பாய்ந்த காட்டமான வார்த்தைகள்.. கூலாக அதிபர் கொடுத்த ரியாக்‌ஷன் | Thanthitv

Update: 2024-06-02 15:52 GMT

அமெரிக்காவின் ரெஹோபோத் கடற்கரையில் கூடியிருந்த பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள், அமெரிக்க அதிபர் பைடனை நோக்கி கண்டன முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.. காசா போரில் இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ரெஹோபோத் கடற்கரை அருகே போராட்டம் நடத்தப்பட்டது... தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த அமெரிக்க அதிபர் பையனை நோக்கி, 16 ஆயிரம் பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், "உங்களைக் கண்டு வெட்கப்படுகிறோம்" என காட்டமாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்