நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய அரசு பேருந்து, கார் - தூங்கிய படியே உயிரிழந்த 7 பேர்

Update: 2023-10-24 12:06 GMT

செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, எதிரில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலே பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆறு பேரில் இரண்டு பேர் பலியானதை அடுத்து, பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மீதமுள்ள நால்வருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்த இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஆயுத பூஜை விடுமுறைக்காக புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ள ஐந்து பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்