ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியைப் பார்த்து சிறுவன் துள்ளிக் குதித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனைப் பார்த்ததும் கோலி ஆட்டோகிராப் போட சென்றார். அப்போது உற்சாக மிகுதியில் சிறுவன் துள்ளிக் குதித்த நிலையில், இந்த காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.