“பாக்சிங் டே டெஸ்ட் - முதல்நாள் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன“

Update: 2024-12-11 08:16 GMT

பிஜிடி தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ளூர் விடுமுறையான அன்று, முதல்நாள் ஆட்டத்திற்கான பார்வையாளர்கள் டிக்கெட்டுகள் அனைத்து விற்றுத் தீர்ந்துள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிகமான இருக்கைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்