டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல்லிடம் சேப்பாக் போராடி தோல்வி அடைந்தது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடர்ந்து ஆடிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபரஜித் 72 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து 159 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய திண்டுக்கல் அணியில் தொடக்க வீரர் விமல் குமார் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
2வது விக்கெட்டுக்கு ஷிவம் சிங் - கேப்டன் அஸ்வின் இணை சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்த பின்னர் ஆட்டமிழந்தனர்.
திண்டுக்கல் அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் கடைசிக் கட்டத்தில் ஆட்டம் பரபரப்பானது.
கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்துக்கு முந்தைய பந்தில் இலக்கை எட்டிய திண்டுக்கல் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிமூலம் 2வது குவாலிஃபயர் போட்டிக்கு திண்டுக்கல் தகுதி பெற்றது. போராடி தோல்வி அடைந்த சேப்பாக் அணி தொடரில் இருந்து வெளியேறியது.