மகளிருக்கு மாதம் ரூ.2,500, இலவச பஸ் பயணம்.. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்.

Update: 2023-11-18 02:54 GMT

தெலங்கானாவில், 500 ரூபாய்க்கு சிலிண்டர், பெண்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் உள்ளிட்ட 6 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.இதன்படி, பெண்களுக்கு மாதம்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவி மற்றும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.விவசாய கூலிகளுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் நிதி உதவி, நெல்லுக்கு குவிண்ட்டாலுக்கு 500 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட இலவசமாக நிலம் வழங்கப்படும் என்றும், வீடு கட்டுவதற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும்,தனி மாநில போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு 750 சதுர அடி நிலம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்