அனுமதி மறுப்பு.. ARR-ஆல் வந்த சிக்கல்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு | Vijay | TVK

Update: 2024-08-20 10:15 GMT

நாளை மறுநாள் கொடியேற்று விழாவுக்கு காவல்துறை அனுமதி கோரி விஜய் தரப்பில் கடிதம்.

கொடியேற்றியவுடன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகம் முன்பு திரளும்

தொண்டர்களிடம் முதல் அரசியல் உரையாற்றவும் விஜய் தரப்பு அனுமதி கடிதத்தில் கோரிக்கை

வைத்திருப்பதாகத் தகவல்.

முதலில் கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் ஐயாயிரம் பேருக்கு மத்தியில் கொடியேற்ற விஜய் அனுமதி கேட்டதாகவும் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் தகவல்.

ஏற்கெனவே அதே இடத்தில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளை கருத்தில் கொண்டு அனுமதி மறுப்பு என தகவல்.

காவல்துறையின் அனுமதி மறுப்பைத் தொடர்ந்து கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே கொடியேற்ற விஜய் திட்டம்.

Tags:    

மேலும் செய்திகள்