Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்

Update: 2023-08-15 07:59 GMT

தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக நீர்ளவத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி.....

காவிரியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் உறுதி.....

தமிழ்நாட்டின் நலனுக்காக மேகதாதுவில் அணை கட்ட ஒத்துழைப்பு தாருங்கள் என கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்....

மேகதாது அணை இருந்திருந்தால், தமிழகம் கேட்கும் நீரை கொடுத்திருக்க முடியும் என்றும் என்றும் பேட்டி...

சென்னை, கோவை, மதுரையை அடுத்து சேலம் மற்றும் திருச்சியில் மெட்ரோ பணிகளில் கவனம் செலுத்து மெட்ரோ ரயில் நிர்வாகம்......

சேலம் மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக் கூறுகள் குறித்த இறுதி அறிக்கை இம்மாத இறுதியில் அரசிடம் அளிக்கப்படும் என தகவல்....

செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம், இனிமேல், 'விடியல் பயணம்' திட்ட்ம என அழைக்கப்படும் எனவு​்​ம் அறிவிப்பு...

சுதந்திர தினத்தையையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறுவதாக இருந்த தேநீர் விருந்து ஒத்திவைப்பு...வேறு தேதியில் நடைபெறும் எனவும் ஆளுநர் மாளிகை அறிவிப்பு...

அடுத்த சுதந்திர தினத்திலும் டெல்லி செங்கோட்டையில் நானே கொடி ஏற்றுவேன் என பிரதமர் மோடி உறுதி...

தான் அடிக்கல் நாட்டும் திட்டங்களை தாமே துவக்கி வைக்கும் பாக்கியமும் தமக்கே உண்டு எனவும் பேச்சு...

பிரதமர் மோடியால் அடுத்த ஆண்டில் அவரது வீட்டில் மட்டுமே கொடியேற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி.....

சுதந்திர தின உரையில் கூட எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்பவரால் எப்படி நாட்டை கட்டிஎழுப்ப முடியும் என்றும் கேள்வி..... 

Tags:    

மேலும் செய்திகள்