நிவாரண தொகை வழங்கப்படும் நாளில் இருந்து 5 நாள்களில் கொடுத்து முடிக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை சிஐடி காலணியில் தனது தொகுதி மேம்பாட்டு கீழ் கட்டப்பட்ட நியாயவிலைக்கடையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஒவ்வொரு நியாய விலைகடையிலும் இருக்க கூடிய குடும்ப அட்டைகளின் படி, அதிகபட்சமாக 5 நாள்களில் நிவாரண தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.