அதிர்வலையை ஏற்படுத்திய தாக்குதல்..5வது நபரை அடையாளம் கண்ட போலீஸ்..வெளியாகும் அதிர்ச்சி தகவல்

Update: 2023-12-14 09:04 GMT

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த பாதுகாப்பு குளறுபடி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சமூக ஊடகப் பக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குருகிராமில் வசிக்கும் லலித் ஜா என்பவர், இந்த வழக்கில் 5வது நபராக அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லலித் ஜா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும், சம்பவத்திற்குப் பின்னர் அதுகுறித்த வீடியோவை என்.ஜி.ஓ நண்பருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. லலித் ஜாவை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லலித் ஜா, மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில், பழங்குடியினர் கல்வி தொடர்பான அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வரும் நிலக்ஷா ஐச் என்பவரை தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. லலித் ஜா, அந்த என்.ஜி.ஓ. அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் லலித் ஜா, ஒரு சமூக ஆர்வலர் என்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. லலித் ஜா கடைசியாக ராஜஸ்தானில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்