இன்று ராமதாஸை நேரே சந்தித்து அன்புமணி வைக்கும் டிமாண்ட்? - பரபரப்பில் தோட்டம்

Update: 2024-12-29 07:54 GMT

இளைஞரணி தலைவர் பதவி வேண்டாமென, ராமதாஸிடம் தெரிவித்ததாகவும் தகவல்

ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அக்கட்சியின் தலைவர் அன்புமணி சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வரும் சந்திப்பு

புதுச்சேரியில் நேற்று நடந்த பாமக கூட்டத்தில் மேடையிலேயே இருவரும் கருத்து மோதலில் ஈடுபட்ட நிலையில் சந்திப்பு

பாமக இளைஞரணி தலைவராக, ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தன் நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு

கட்சிக்கு வந்த 4 மாதங்களில் எப்படி பொறுப்பு வழங்க முடியும் என்று மேடையிலேயே கேள்வி எழுப்பிய அன்புமணி

விருப்பம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியிலிருந்து வெளியேறலாம் என்று காட்டமாக தெரிவித்த ராமதாஸ்

சமரச பேச்சுவார்த்தை நடத்த, பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் சந்திப்பு

நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள அன்புமணி

முகுந்தனுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக இருப்பதாக தகவல்

தான் பரிந்துரைக்கும் நபரை இளைஞரணி தலைவராக நியமிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்த உள்ளதாக தகவல்

பசுமைத்தாயகம் அமைப்பில் உள்ள ஒருவர் நியமனம் செய்யப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்

அன்புமணி கோரிக்கையை ராமதாஸ் ஏற்பாரா? முகுந்தன் நியமனத்தில் மாற்றம் வருமா? என தொண்டர்கள் எதிர்பார்ப்பு

தனது நிலைப்பாட்டில் இருந்து அன்புமணி ராமதாஸ் பின்வாங்க மாட்டார் என தகவல்

பாமக இளைஞரணி மாநில தலைவராக முகுந்தனை நியமனம் செய்து ராமதாஸ் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். முகுந்தனுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக இருப்பதாக தகவல்.

அன்புமணி பரிந்துரை செய்யக்கூடியவர் கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ய வேண்டும் என்று, இந்த சந்திப்பின்போது வலியுறுத்தப்பட உள்ளது

பசுமைத்தாயகம் அமைப்பில் உள்ள ஒருவர் நியமனம் செய்வதற்கு வாய்ப்பு

அன்புமணி கோரிக்கையை ராமதாஸ் ஏற்பாரா, முகுந்தன் நியமனத்தில் மாற்றம் வருமா என நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்