இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகம் தகர்ந்து விட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாஷிங்டனில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே சித்தாந்த போர் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் கூட்டணியின் சித்தாந்தம் பன்மைத்துவத்தை ஆதரிப்பது என்றும் பா.ஜ.க.வின் சித்தாந்தம் பன்மைத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார். பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, தான் பல தரப்பு மக்களின் குரலாக மாற முயற்சித்து வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகமானது தகர்ந்து விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.