தேர்தல் அதிகாரி ரிசல்ட்டை மாற்றிய விவகாரம்.. பாஜகவுக்கு மீண்டும் ஜாக்பாட்
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் ஊரறிந்த கதையென்றாலும், திடீர் திருப்பமாக பாஜகவை சேர்ந்த மேயர் ராஜினமா செய்துள்ளார்.
கூடவே ஆம் ஆத்மியை சேர்ந்த மூன்று கவுன்சிலர்கள் கட்சி தாவியுள்ளனர்.. இப்படி அடுத்தடுத்த நகர்வுகளால், ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரசிற்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது பாஜக..
மினி ப்ரீத்
சண்டிகர் மாநகராட்சியில் அண்மையில் மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
மொத்தமுள்ள 36 இடங்களில், பாஜக சார்பில் போட்டியிட்ட மனோஜ் சோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட குல்தீப் குமார் 12 வாக்குள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் இருந்தும், அதில் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்தார் தேர்தல் அதிகாரி.
அதேசமயம், தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டுகளில் திருத்தம் செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, தேசிய அளவில் சர்ச்சையானது.
ப்ரீத்
தேர்தல் அதிகாரியே முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஆம் ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
வீடியோ காட்சியால் அதிர்ச்சியான உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டதாக கடுமையாக விமர்சித்ததோடு, தேர்தல் அதிகாரி செய்வதை உச்சநீதிமன்றம் பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லுங்கள் என்றனர், காட்டமாக...
மேலும், 7ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநகராட்சி கூட்டத்தையும் ஒத்திவைக்க உத்தரவிட்டதோடு, தேர்தல் நடத்தும் அதிகாரியை இன்று நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவசரகதியில், தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மனோஜ் சோன்கர்.
மறுபுறம், சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவியுள்ளனர். பூணம் தேவி, நேஹா முசாவத், மற்றும் குர்சரண் காலா ஆகியோர் டெல்லியில், பாஜக பொதுச்செயலாளர் வினோத் திவேதி முன்பு பாஜவில் இணைத்துக்கொண்டனர்.
ஆம் ஆத்மி கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர்கள், பிரதமர் மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
மீண்டும் சண்டிகர் மாநகராட்சிக்கு தேர்தல் வந்தாலும், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இருந்தாலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது