கொரோனா ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பணம் ...50 லட்சம் ரூபாய் மோசடி ...மத்திய அரசுக்கு திடீர் உத்தரவு
இதுகுறித்து, சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் குணபாத துறையின் இணை பேராசிரியராக பணியாற்றும் சித்தா மருத்துவர் எஸ்.விஷ்வேஸ்வரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய் மோசடி குறித்து, 2022 அக்டோபரில் டெல்லியில் உள்ள தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிக்கு புகார் அனுப்பியதாக கூறியுள்ளார். போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சக இயக்குனருக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த, நீதிபதி அனிதா சுமந்த், மருத்துவர்களிடம் மத்திய அரசு விரிவான விசாரணை நடத்தி, 12 வாரத்துக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.