எப்போ கல்யாணம்? - வெட்கத்தோடு ராகுல் சொன்ன பதில் -பிரியங்கா கொடுத்த ரியாக்ஷன்
53 வயதாகும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் எப்போது திருமணம் என தலைவர்களும், மக்களும் கேட்பது தொடர் கதையாக இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் காந்தி, அங்கு பிரசாரம் செய்த போது வாக்காளர்கள் எப்போது திருமணம் என பாசமாக கேள்வியை கேட்டனர். அதற்கு, இப்போது தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி சிரித்துக்கொண்டு சென்றார்.