சுவரில் ஒட்டி இருந்த மண்... தோண்டியதால் நேர்ந்த துயர சம்பவம் - பரிதாபமாய் உயிரிழந்த 5 பேர்

Update: 2024-03-31 13:48 GMT

புதுச்சேரியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், முதலியார் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேங்காய்திட்டு பிரதான வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில், 16 ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், வசந்தா நகர் 3வது வீதியில், வாய்க்கால் சீரமைக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வாய்க்காலை ஒட்டிய, மின்துறையில் உள்ள 7 அடி உயரம் கொண்ட மதில் சுவர் சரிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இடுபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு, 8 பேரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாக்கியராஜ், பாலமுருகன் மற்றும் அந்தோணி ஆகிய 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், சிகிச்சைப் பலனின்றி 2 உயரிழந்த நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. வாய்க்காலில் இருந்து தூர்வாரிய மண்ணை மதில் சுவர் ஒட்டி கொட்டியதால், பாரம் தாங்காமல் மதில் சுவர் இடிந்து விழுந்ததாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்