இன்று நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பிற்காக நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் அரங்கேறின. இதனைக் கருத்திற்கொண்டு நாளைய தினம் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.