கெஜ்ரிவால் கைது... பறந்த ஃபோன் கால்... "விரைவில்" - மம்தா கொடுத்த வார்னிங் | Mamata Banerjee
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்... இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தில் தனது ஆதரவை தெரிவித்ததாகவும், இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்... பாஜகவில் இணைந்த பிறகு சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்டனையின்றி தங்கள் முறைகேடுகளைத் தொடர அனுமதிக்கப்படுவதாகவும் மம்தா குறிப்பிட்டுள்ளார். இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என தெரிவித்துள்ள அவர் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையர்களை சந்தித்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.