அரசியல் வரலாற்றில் முதன்முறை... ஒரு மக்களவை தொகுதிக்கு 2 MLA -க்கள் போட்டி

Update: 2024-03-13 06:20 GMT

கேரள அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு மக்களவை தொகுதியில், 2 எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட்டுள்ளனர். மார்க்சிஸ்ட்டை சேர்ந்த கேரள மாநில சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் ஷைலஜா, கண்ணூர் மாவட்டம் மத்தனூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். காங்கிரசை சேர்ந்த ஷஃபி பரம்பில் என்பவர், பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர்கள் இருவரும் கோழிக்கோடு மாவட்டம் வடகரை மக்களவை தொகுதியில் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மக்களவை தொகுதியில் 2 எம்.எல்.ஏ.க்கள் போட்டியிடுவது கேரள அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்