குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக தண்ணீர் திறந்து விடப்படும் நாளான ஜூன் 12ஆம் தேதியாகிய இன்று, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம்
43.71 அடியாகவும், நீர் இருப்பு 14.08 டி.எம்.சியாகவும் உள்ளன. மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது 90 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்தால் மட்டுமே குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கர்நாடக அணைகளில் 37.03 டி.எம்.சி தண்ணீர் மட்டும் இருப்பதால் அங்கிருந்து நீர் திறப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளத்தின் வயநாடு, கர்நாடகத்தின் குடகு பகுதிகளில் அடுத்த மாத இறுதியில் பருவமழை தீவிரமடையும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நடந்தால் ஆகஸ்ட்
இரண்டாவது பாதியில் தான் மேட்டூர் அணையிலிருந்து
தண்ணீர் திறப்பது சாத்தியமாகும். அதுவரை குறுவை
சாகுபடியை தாமதித்தால் வடகிழக்குப் பருவமழையில்
குறுவை பயிர்கள் சேதமாகும் ஆபத்து உள்ளது.