திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் அக்ஷர் பட்டேல், ரிஷப் பந்த் ஆகியோர், சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை வி.ஐ.பி பிரேக் தரிசனம் மூலம், இருவரும் ஏழுமலையானை வழிபட்டனர். கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். அக்ஷர் பட்டேல், ரிஷப் பந்த்துடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.