அதிர்வலையை ஏற்படுத்திய CAA சட்டம்.. மத்திய அரசு கொடுத்த புதிய விளக்கம் | CAA
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், அதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் குடியுரிமை திருத்த சட்டம் எந்த ஒரு மதத்திற்கும், சமூகத்திற்கும் எதிரானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து, அகதிகளாக வந்த சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே இந்த சட்டம் உதவும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.