மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (31-01-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-01-31 10:53 GMT

மேற்கு வங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத காங்கிரசுக்கு 2 எம்.பி. சீட் தருவதாக கூறியதை காங்கிரஸ் ஏற்கவில்லை.......

பாஜகவுடனான எங்கள் போராட்டம் தொடரும் என்றும், தனித்து போராடுவோம் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம்...மேற்குவங்க மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசப்பட்டதால் பரபரப்பு....

காரின் பின்பக்க கண்ணாடி உடைந்த நிலையில், ராகுல்காந்திக்கு காயம் எதுவும் இல்லை எனத் தகவல்...இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விளக்கம்....

கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வலியுறுத்தியதாகவும், கட்சிக்கான தொகுதிகள் முடிவு செய்யாததாலும் விலகியதாக அறிவிப்பு ....ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும்....

தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் விருப்பம்....

நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவரே பிரதமராக வர வேண்டும்...

கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்...

Tags:    

மேலும் செய்திகள்