தொடரும் ED விசாரணை... சிக்கிய முக்கிய ஆவணங்கள்... ஆடியோ, வீடியோவாகவும் வாக்குமூலம் பதிவு...

Update: 2023-11-21 13:47 GMT

நீர்வளத் துறைம் முதன்மை பொறியாளர் முத்தையா, அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக விசாரணைக்காக ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம், ஆற்று மணல் விற்பனை செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதுதொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், சென்னையில், எழிலகத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகம் மற்றும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அறையிலும் கடந்த செப்டம்பர் மாதம் சோதனை நடைபெற்றது. இதில், 12 கோடியே 82 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத 2 கோடியே 33 லட்ச ரூபாய் பணம், 56 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நேற்று விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முழுவதும் ஆடியோவாகவும் வீடியோவாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது நாளாக விசாரணைக்காக அவர் இன்று ஆஜரானார். நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு முழுமையான பதிலை அளித்துள்ளதாகவும், ஆவணங்களை அதிகாரிகள் கேட்டதால் இன்று சமர்ப்பிக்க உள்ளதாகவும் முத்தையா முன்னதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்