ஜயப்பன் மீதும் அவருக்கு மேற்கொள்ளும் விரதங்களை கொச்சைப்படுத்தும் வகையில், பாடல் ஒன்றை பாடிய, கானா இசைவாணி மற்றும் அதனை வெளியிட்ட பா.ரஞ்சித் தலைமையிலான நீலம் கலாச்சார நிர்வாகத்தின் மீதும், நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நேரில் வந்து புகார் அளித்துள்ளனர்