இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (22-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-22 15:46 GMT

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்...

தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் தேர்வு...

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 19வது கேள்விக்கு சரியான விடையை கண்டறியும் வகையில், டெல்லி ஐஐடி குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, நாட்டில் தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்சினை உள்ளதாக மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்கள் வெங்கடேசன், ரமேஷ்குமார் வழங்கிய தகவல்கள் இவை...

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற, எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி இன்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே, நடப்பு கூட்டத்தொடரில் 6 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விவரிக்கிறார்கள் செய்தியாளர்கள் ரமேஷ்குமார் மற்றும் ராஜா...

திமுகவில் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு....

Tags:    

மேலும் செய்திகள்